ஹிக்கடுவையில் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் மரணத்தில் சந்தேகம்!

ஹிக்கடுவ தொட்டகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள மொலபு ஓய ஆற்றிலிருந்து நேற்று (08) பிற்பகல் ரஷ்ய பெண்ணொருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிஸனோவஸ்கியா செனியா என்ற 35 வயதுடைய பெண், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஹிக்கடுவை கல்வல வீதியிலுள்ள ரிவர் குடிசையில் தங்கியுள்ளார்.

சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய பெண்ணான இவர் இலங்கை வந்துள்ளார்.

ஆற்றில் அவரது சடலம் மிதப்பதைப் பார்த்த அப்பகுதியினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

காலி பதில் நீதவான் லலித் பத்திரனவின் உத்தரவின் பிரகாரம் உயிரிழந்த ரஷ்ய பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் முலெதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.