திருநெல்வேலியில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் – விசாரணையைத் தொடங்கிய அமுதா ஐ.ஏ.எஸ்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவந்திபுரத்தைச் சேர்ந்த இசக்கி முத்து மற்றும் அவரது சகோதரர்களான செல்ல பாண்டியன், மாரியப்பன் உள்ளிட்டோரை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அவர்களுடைய பற்களைப் புடுங்கி கடுமையாக சித்தரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்பு பட்டியலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்தவிவகாரம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் – ஆட்சியர் விசாரணை நடத்திவந்தார். அதனைத் தொடர்ந்து, அமுதா தலைமையில் சிறப்பு விசாரணை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்தநிலையில், ‘ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாசியர் அலுவலகத்தில் விசாரணையைத் தொடக்கினார்.
பணியாளர்கள் மனு கொடுக்க வருபவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. வருபவர்கள் சோதனைக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். விசாரணை நடைபெற உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.