வியட்நாமிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 23 இலங்கையர்கள்!
சட்டவிரோதக் குடியேற்றத்துக்கான பயணத்தின்போது வியட்நாம் கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் அடங்கிய குழுவில் இருந்த மேலும் 23 இலங்கையர்கள் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கைக் கடற்படையினர் இன்று தெரிவித்தனர்.
2022. நவம்பர் 7 ஆம் திகதியன்று வியட்நாமுக்கு அப்பால் கடலில் படகு விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட இலங்கையர்களில், 151 பேர் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்டு 2022 டிசம்பர் 28 ஆம் திகதியன்று இலங்கை வந்தடைந்தனர்.
இந்தநிலையில் வியட்நாமில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 23 இலங்கையர்கள் இந்த வாரம் கட்டுநாயக்க வந்தடைந்தனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
அவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.