முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக பிரிவு தேவை – ஹக்கீம்
முஸ்லீம் மக்களுக்கு தனி நிர்வாக மாவட்டத்தை வழங்க முந்தைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு முன்மொழிவு செய்யப்பட்டது என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் முன் அவர் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமும், பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அம்பாறை மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் தனி நிர்வாக மாவட்டத்தைக் கோரியதாக அவர் தெரிவித்தார்.
ஒரு மாகாண மக்கள் அரசியல் ரீதியாக இதுபோன்ற கோரிக்கையை விடுவது நியாயமானது என்றும் அது தேசிய நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த கோரிக்கை ஒலுவில் அறிக்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெளிவுபடுத்தினார்.
முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு தனி நிர்வாக பிரிவு தேவை என்ற கருத்து இன்னும் உள்ளது என்றார் அவர்.