ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹாரான் அல்ல – ஹக்கீம்
இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கோ அல்லது அதன் தலைவர் சஹாரான் ஹாஷிமுக்கோ ஐ.எஸ் உடன் நேரடி தொடர்பு இல்லை என்றும், ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரி நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்த விரும்பிய மற்றொரு சக்தியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (07) ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் முன் சாட்சியமளித்தார்.
“அவர்களின் இறுதி குறிக்கோள் நாட்டை ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதேயாகும். ஐ.எஸ் என்பது வெறும் பெயராகவும், சஹாரனும் அவரது குழுவினரும் இந்த தாக்குதலை நடத்த இந்த சக்தியால் கருவிகளாக பயன்படுத்தப்பட்டனர்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது ஒரு முறை வாழ்நாளில் நிகழ்ந்த நிகழ்வு என்றும், மீண்டும் ஒருபோதும் அது நடக்காது என்றும் ஹக்கீம் தெரிவித்தார்.
அவரது அறிக்கையைத் தொடர்ந்து, கமிஷனர்கள் ஹக்கீமிடம் அந்த சக்தியை அம்பலப்படுத்த முடியுமா என குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஊடகங்கள் இல்லாத நிலையில் சக்தியை அம்பலப்படுத்த முடியும் என்றார்.