கத்தரிக் காய்,முருங்கைக் காய் டிஷ்..

கத்தரிக்காயும் முருங்கைக் காயும் நல்ல காம்பினேஷன்..

இதற்குத் தேவையான பொருள்கள் –

கத்தரிக்காய் – 1/4 கிலோ

முருங்கைக் காய் – 3

வெங்காயம் – 1

தேங்காய் துறுவல்  – 4 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 5 அல்லத்

தனி மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிது

உப்பு – தேவைக்கு ஏற்ப

சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப

முதலில் முருங்கைக் காயை உடையாமல் வேக வைத்துக் கொள்ள வேண்டும். கத்திரைக்காயை நன்கு குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய்,சீரகம்,மி,வத்தல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அல்லது மிளகாய்ப்பொடியும் போட்டுக் கொள்ளலாம். வத்தல் பயன்படுத்தினால் முதலில் வத்தலை நன்கு மசிய அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் தேங்காய் பூவினையும்,சீரகத்தையும், ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றி,கடுகு,உ.பருப்பினைப் போட்டுத் தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை வதக்கிக் கொள்ள  வேண்டும். பின்னர் வேக வைத்த கத்தரிக்காய்,முருங்கைக் காய்,அரைத்த விழுதினைப் போட்டுத் தீயினை கொஞ்சம் சுருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மசாலா விழுதின் பச்சை வாசனைப் போன பின் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.வாசனைக்கு ஒரு ஆர்க் கருவேப்பிலைச் சேர்த்துக் கொள்ளலாம்..

 

 

Leave A Reply

Your email address will not be published.