பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க சர்வதேச பொறிமுறையே வேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
தொடர்பில் சபையில் சுமந்திரன் எம்.பி. உரை

“உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது (TRC) சர்வதேச பொறிமுறையாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் குழு அமைப்பதில் பயன் இல்லை.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், “2009 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில்தான் மிக மோசமான படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்பட்டன.” எனவும் சுட்டிக்காட்டினார்.

“இன்றைக்கும் சர்வதேச நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு, ” நாங்கள் சர்வதேசம் செல்லத் தயாரில்லை எனவும், உள்நாட்டு பொறிமுறைக்கமைய விடைகொடுப்போம் எனவும் கூறி வரும் அரசு, இன்னும் ஒரு விடையையும் கொடுக்காமல் உள்ளது. ஆனால், இழப்பீட்டுக்காக வெளிநாட்டு நீதிமன்றத்துக்குச் செல்கின்றது. இது உங்களுடைய (ஆட்சியாளர்களின்) இனவாத முகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றது” என்றும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.

“ஜனாதிபதியை இன்று சந்திக்கின்றோம். TRC பற்றியும் (உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) கலந்துரையாடப்படும். TRC என்பது சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என எடுத்துரைக்கவுள்ளோம். அவ்வாறு இல்லாவிட்டால் அதில் பயன் இருக்காது” – என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.