100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கம் வென்ற சாந்தி பெரேரா.
கம்போடியாவில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சாந்தி பெரேரா நூறு மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
நூறு மீட்டர், இருநூறு மீட்டர் இரண்டு போட்டிகளிலும் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூர்ப் பெண் என்ற சாதனையை அவர் புரிந்திருக்கிறார்.
அவர் இன்று நடந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் 11.49 விநாடிக்குள் அந்த ஓட்டத்தை முடித்தார்.
மே 9ஆம் தேதி நடந்த 200 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் சாந்தி 22.69 விநாடிக்குள் ஓட்டிததை முடித்தார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சாந்தி பெராரா தொடர்ந்து
பல சாதனைகளைப் புரிந்துவருகிறார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் சாந்தி 22.89 வினாடிகளில் அந்த ஓட்டத்தை முடித்துப் புதிய தேசியச் சாதனையைப் புரிந்தார்.
அந்தச் சாதனையைப் புரிந்த முதல் ஆசியப் பெண் எனும் பெயரும் புகழும் அவரைச் சேர்ந்தது.