கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனையா? தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை
கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகள், குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்து 891 கடைகளில் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மொத்தமாக 775 கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடை குறைவாக விநியோகம் செய்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகளை பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும் என்றும் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
எடை அளவைகள் சட்டத்தின் கீழ் மீன், இறைச்சி கடைகளில் எடை குறைவாக விற்பது குறித்து சிறப்பு ஆய்வு நடந்தது.