அமைச்சரவை பத்திரங்களை சமர்பிப்பித்து காலத்தை விரயமாக்காதீர்கள் – ஜனாதிபதி.
இனிமேல் காசு கேட்டு அமைச்சரவை பத்திரங்களை சமர்பிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், நிதியமைச்சர் என்ற ரீதியில் தமக்கு அறிவித்தாலே போதும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பிப்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இனிமேலாவது இணைந்து தீர்மானங்களை எடுத்து தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் பேசும் போது , உங்களுக்கு தேவையானதை என்னோடு பேசுங்கள். எது முடியும், எது முடியாது என நான் சொல்கிறேன். கெபினட் பேப்பர்களை சமர்பித்து , மேசையில் தொங்கி நின்று , கொடுக்க முடியாது என இழுத்தடிப்பதை விட , எது சாத்தியம் என்பதை நான் சொல்கிறேன். எனவே என்னிடம் நேரடியாக பேசுங்கள் என்றார் ஜனாதிபதி.