விபச்சாரத்தில் ஈடுபட்ட முன்னணி வங்கியின் நிர்வாக அதிகாரி உட்பட 7 பேர் கைது
பணக்கார வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பெண்களை விற்பனை செய்து வந்த மூவரையும், அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்களையும் வாலான ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் (22) ஹொரணை, அங்குருவாதோட்டையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட பெண்களில் பிரதான வர்த்தக வங்கியொன்றின் நிறைவேற்று தரப் பணியாளர் ஒருவரும் , மாடல் அழகி ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் வாழும் நபர் ஒருவர் இந்த விபச்சார வியாபாரத்தை நடத்தி வருவதாக வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இரகசிய முகவர் ஒருவரை பயன்படுத்தி குறித்த நபரையும் குழுவையும் கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டுக் குழுவொன்றிற்கு தமது சேவைகள் தேவையென அழைப்பு விடுத்து வாகனத்தில் ஹொரணை அங்குருவாதொட்ட பிரதேசத்திற்கு அவர்களை வரவழைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள், ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் சுமார் 55,000 ரூபா அளவில் அறவிடுவதாகவும், இந்த வியாபாரத்திற்கு ஆதரவளித்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட 3 ஆண்களும் , 4 பெண்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.