யாழில் கோர விபத்து; அபிதாஸ் எனும் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு (Video update)
யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த நபர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை தட்டியுள்ளார்.
இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லொறியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
CCTV Video
விபத்தில் யாழ்.தென்மராட்சி – மீசாலையை சேர்ந்த இராஜரட்ணம் அபிதாஸ் (வயது 26) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.