தமிழ்நாட்டில் 500 மதுபானக் கடைகள் மூடல்…வெளியான முக்கிய தகவல் !

இளைஞர்கள் மது போதையில் சிக்கித் தவிப்பதாக குற்றம்சாட்டிவரும் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சட்டப்பேரவையில் அண்மையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து வரும் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி 500 கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனையொட்டி, எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்ற பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் தயார் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 5 ஆயிரத்து 289 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மூலம் மாநில அரசுக்கு வருவாயாக 2021-22-ம் ஆண்டில் 36 ஆயிரத்து 56 கோடி ரூபாய் கிடைத்தது. இது கடந்த நிதி ஆண்டில் 44 ஆயிரத்து 98 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள், கோயில்களின் அருகே உள்ள 500 மதுபானக்கடைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 500 மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த 169 மதுக்கூடங்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.