நாள் முழுவதும் செல்போன் பயன்படுத்திய சிறுமி எடுத்த விபரீத முடிவு !
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் மாவட்டத்தின் பிபர்தோடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா. இவரது மகள் ஜெனிஷா. இந்த சிறுமி சமீபத்தில் 7 வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதி முடித்த நிலையில், விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமியும் அவரது சகோதரரும் விடுமுறை நாள்களில் அதிக நேரம் செல்போனிலேயே கழித்துள்ளனர். இதை அவரது தாயார் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இருவரும் நாள் முழுவதும் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அவரது தாயாரும் மாமாவும் கண்டித்துள்ளனர்.இப்படி செல்போனுக்கு அடிமையாக இருப்பது சரியல்ல என்று சிறுமியை தாயார் கடுமையாக திட்டியுள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமி அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்டுள்ளார். குடும்பதாருக்கு இந்த விவரம் தெரியவில்லை. பிள்ளைகள் வெளியே விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்த நிலையில், சிறுமி வீட்டு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீண்ட நேரம் ஆனதால் சந்தேகமடைந்த குடும்பத்தார் அறையை உடைத்து பார்த்த போது தான் உண்மை தெரியவந்துள்ளனர். அவர்கள் அதிர்ச்சி அடைந்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில், அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக லால்பூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.