பட்டதாரி பயிலுனர்களிற்கு பிரத்தியேக துறைகளில் பயிற்சியளித்தல் தொடர்பான கூட்டம்.
புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களிற்கு பிரத்தியேக துறைகளில் பயிற்சியளித்தல் தொடர்பான முன்னாயத்த கூட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளன பட்டதாரி பயிலுனர்களிற்கு பிரத்தியேக துறைகளில் பயிற்சி வழங்குவது தொடர்பாக பயிற்சிக்குப் பொறுப்பான பாதுகாப்புப் பிரிவினருடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் 09.09.2020 வியாழக்கிழமை மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கடமைக்காக இணைக்கப்பட்ட 233 பயிலுனர்களில் 216 பயிலுனர்கள் குறித்த பிரதேச செயலகங்களில் கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் உள்வாங்கி பயிற்சி அளித்தல் தொடர்பான விடயங்கள் இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளன.
மேற்படி இவ் விசேட கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், பயிற்சிகளுக்குப் பொறுப்பான இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிறுவன முகாமையாளர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.