உடலுறவு ஒரு விளையாட்டு: அங்கீகாரம் அளித்து சாம்பியன்ஷிப் போட்டியாக நடத்தும் சுவீடன்.
உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விசயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது சுவீடன். அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் என பெயரிட்டுள்ள சுவீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.
இந்தப் போட்டி வருகிற 8-ந்தேதி முதல் நடத்தப்பட உள்ளது. பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது. இந்த போட்டியை நடத்த சுவீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது. 70 சதவீதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள்.
30 சதவீதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ள ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். சுவீடனின் இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.