விமலுக்கு நீதிமன்றம் பிடியாணை!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்று அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராகச் செயற்பட்ட இளவரசர் செயித் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, விமல் வீரவன்ச இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.