மாஸ்கோவை கைப்பற்றுவதை விட்டு , வாக்னரின் இராணுவம் திரும்புகிறது!
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ரசியாவில் இரத்தக்களரியைத் தடுக்கும் நோக்குடன் தனது இராணுவக் குழு திரும்பும் இராணுவத் தளபதி வாக்னர் என தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
ஜூன் 23ஆம் திகதி இந்தப் பயணத்தை ஆரம்பித்து மாஸ்கோவில் இருந்து கிட்டத்தட்ட 200 கிலோமீற்றர் தூரத்தை அடைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் ரஷ்யர்களின் ஒரு துளி இரத்தம் கூட சிந்த அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி வாக்னர் தனது டெலிகிராம் சேனலில் ரஷ்ய தலைநகருக்கான தனது பயணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஊடக சேனல்களின்படி, வாக்னரின் தலைவர் பெலாரஷ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ , வாக்னரின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஷினுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி, தமது நாடு இராணுவக் கிளர்ச்சியை எதிர்நோக்கி வருவதாகவும் எனினும் நாட்டில் உள்நாட்டு யுத்த சூழ்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதையும், வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாஸ்கோ நகரில் பொதுக்கூட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை தினமாக மாற்றப்பட்டுள்ளதாக மாஸ்கோ மேயர் கூறுகிறார். அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் மாஸ்கோவிற்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டது, மேலும் வாக்னர் படையெடுப்பு ஏற்பட்டமையால் ரஷ்ய துருப்புக்கள் மாஸ்கோவில் பாதுகாப்பை கடுமையாக்கியது.