ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 பேர் கைது… சிபிஐ தீவிர விசாரணை
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம் பால்சோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலையம் அருகே, மேற்குவங்கத்தின் ஷாலிமரில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.அப்போது அந்த வழியாக என்ற பெங்களுரு – ஹவுரா ரயிலும் விபத்தில் சிக்கியது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ, விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சீனியர் பிரிவு பொறியாளர் அருண் குமார் மோகந்தா, பொறியாளர் அமீர் கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையில், ஒடிசாவில நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனித தவறே முக்கியக் காரணமாகும் என்றும் தவறாக சிக்னல் கொடுத்ததன் விளைவாகத் தான் இந்த விபத்து நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.