16 கோடி பெறுமதியான திரவ தங்கத்துடன் 5 வர்த்தகர்கள் கைது.
பதினாறு கோடியே நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான திரவ தங்கம் மற்றும் பவுடர்களை சென்னைக்கு கடத்திச் செல்லத் முயன்ற ஐந்து வர்த்தகர்களை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து இன்று பகல் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகர்கள் நால்வரும் 55 வயதுடைய வர்த்தகர் ஒருவரும் இந்த திரவ தங்கப் பொதிகளை விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் இன்று பிற்பகல் 01.55 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1176 இல் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் 08 கிலோ 650 கிராம் எடையுள்ள 23 திரவ தங்க வில்லைகள் மற்றும் தங்கப் பொடி அடங்கிய 10 பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தங்க ஜெல் விலைகள் மற்றும் தங்க தூள் பொதிகளை மேலதிக விசாரணைகளுக்காக கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.