அசாம் வெள்ளத்துக்கு 40 ஆயிரம் பேர் பாதிப்பு!

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரம்மபுத்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அசாமின் பிஸ்வந்த் துணைப் பிரிவில் மேலும் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

அசாமின் பேரழிவு மேலாண்மை நிறுவனத்தின் தகவலின்படி,

கோஹ்பூர் வருவாய் வட்ட பகுதிகளில் 22,417 பேரும், ஹாலெம் வருவாய் வட்ட பகுதிகளில் 10 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பிஸ்வநாத் துணைப்பிரிவின் கீழ் உள்ள 47 கிராமங்கள் நீரில் மூழ்கியதில், 858 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கோஷ்பூர் பகுதியில் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்து வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

15 மாவட்டங்களில் 31 வருவாய் வட்டங்களுக்குக் கீழ் 385 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1.08 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 22 நிவாரண முகாம்கள் மற்றும் 71 நிவாரண விநியோக மையங்களை நிர்வாகம் அமைத்துள்ளது. தற்போது 4,275 பேர் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

கோலகத் மாவட்டத்தில் 19,379 பேரும், தேமாஜி மாவட்டத்தில் 13,000 பேரும், மஜுலியில் 12 ஆயிரம் பேரும், திப்ருகரில் 12,335 பேரும், சிராங்கில் 6,218 பேரும், துப்ரியில் 3336 பேரும், சிவசாகரில் 3,135 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,300-க்கும் மேற்பட்ட விலகுங்கள், கோழிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எஸ்.டி.ஆர்.எஃப், என்.டி.ஆர்.எஃப், அவசர சேவைகள் நிர்வாகத்தின் குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.