டெங்கு நோய் பரவலை முற்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை.
வலி மேற்குப் பிரதேச சபையால் இன்று டெங்குய நோய் பரவலை முற்கூட்டியே தடுக்கும் முகமாக J/181,J/179 ஆகிய கிராமசேவையாளர் பிரிவில் உக்காத கழிவுப் பொருட்களான பிளாஸ்டிக்,போத்தல்,தகரம்,ரயர் போன்ற பொருட்களை மட்டுமே அகற்றப்பட்டது.
தயவு செய்து உக்கக் கூடிய கழிவுகளான வாழை மரத்தண்டு கால்நடைகள் உண்ட புல்லுக்கழிவு, தென்னோலை, வீட்டுல் கூட்டிஅள்ளப்படும் கழிவுகள் பம்பஸ், போன்றவற்றை வெளியில் வைப்பதை தவிர்த்துக் கொள்ளும்படியும் சமூகத்தை டெங்கு நோயில் இருந்து பாதுகாக்கவே இக்கழிவுகளை சுகாதார பரிசோதகர்களின் வேண்டுதலின் அடிப்படையில் பிரதேச சபைகள் கிராமங்களில் உள்ள குப்பைகளை அகற்றிவருகின்றனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளல் வேண்டும் .
உக்கும் கழிவுகளை தென்னை மரகிடங்கில் அல்லது விவசாய பசளையாக பயன்படுத்த கிராம மட்டத்தில் இயங்கும் அமைப்புக்கள் ஊக்கத்தினை பொதுமக்களிற்கு வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது.