யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற பாரதியார் நினைவு தின நிகழ்வு.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற பாரதியார் நினைவு தின நிகழ்வு.
கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்லூரியின் அதிபர் சொலமன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாண கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நினைவு நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் வணக்கத்துக்குரிய தியாகராஜா கலந்துகொண்டு பாரதியார் பற்றிய சிறப்புரையாற்றியதோடு,பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாரதியாரின் கவிதைகள் அடங்கிய கவியரங்கம் இடம்பெற்றதோடு பாடசாலை மாணவர்களின் சிறப்பு நாடகமும் இடம்பெற்றது.