ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு… தண்ணீரில் மூழ்கிய 400 கார்கள்…!
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் மழை பெய்து வரும் நிலையில், பல மாநிலங்கள் மிகுந்த சேதங்களை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஹிண்டன் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட400க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மாதங்களாக தவணைத் தொகை செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்து சுதியானா கிராமத்தில் ஹிண்டன் நதிக்கரை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று பிற்பகல் 3 மணி அளவில் குறிப்பிட்ட அந்த நதியில் திடீரென தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 400 க்கும் மேற்பட்ட கார்கள் தஹனீரில் மூழ்கியது. மேலும், குறிப்பிட்ட இந்த பகுதியில் 200க்கும் அதிகமான வீடுகளும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கார்களை வேறு பகுதிக்கு மாற்ற பலமுறை காவல்துறை எச்சரித்தும், அதனை கார் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை, இவர்களின் அலட்சியமே இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.