’13’ குறித்து தமிழ் எம்.பிக்களுடன் மாத்திரம் பேச முடியாது! – சர்வகட்சி மாநாடடில் ஜனாதிபதி தெரிவிப்பு.

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல. இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை 5.30 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.