70 வயசுல ரஜினி மாதிரி நடிச்சிட்டு.. சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படுங்க..
விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழாவையே நடத்தாமல் விட்ட சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் மிகப்பெரிய ஃபேன் பாய் தான் என நிரூபித்துள்ளார்.
70 வயதிலும் ஒரு தயாரிப்பாளர் உங்களை நம்பி வந்து படம் கொடுக்கணும், இந்த வயசிலும் அவரை போல ஸ்பீடா நடக்கணும், நடிக்கணும், உங்க படத்தை பார்க்க அப்பவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கிடக்கணும். அப்படி செஞ்சா நீங்க சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு தாராளமாக ஆசைப்படலாம் என நடிகர் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் நேரடி பதிலடி கொடுப்பது போன்றே கலாநிதி மாறன் பளிச்சென பேசி விட்டார்.
ரஜினிகாந்த் ரெக்கார்டு மேக்கர், ரெக்கார்டு பிரேக்கர் இல்லை என ஆரம்பத்திலேயே நடிகர் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக கலாநிதி மாறன் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெறி வந்தது போல பவர்ஃபுல்லான ஸ்பீச்சை கொடுத்துள்ளார். எங்க அப்பா, நான், என் வாரிசு என அனைவருமே ஹுகும் பாடலில் வருவது போல ரஜினி ரசிகர்கள் தான் என்று அந்த பாடலின் வரிகளுக்கு அர்த்தத்தை சேர்த்து விட்டார் கலாநிதி மாறன்.
தளபதி பெயரை இழுத்த கலாநிதி மாறன்: அப்போ ரஜினிகாந்துக்கு போட்டியே இல்லையா? என சொல்லி விட்டு தளபதி விஜய்யின் பெயரை சொல்லி கேப் விட்டதும் அரங்கமே அதிர ஆரம்பித்து விட்டது.
உடனே விஜய் சொன்னது போல, ரஜினிகாந்துக்கு சிவாஜி ராவ் தான் போட்டியே.. வேற யாருமே கிடையாது என சொல்லி அப்ளாஸ் அள்ளினார்.
இந்தியாவிலேயே ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினி தான்: சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சிலர் ஆசைப்படலாம். அதில், தப்பே இல்லை. ஆனால், அவங்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன்.
70 வயதிலும் பெரிய தயாரிப்பாளர் உங்களை நம்பி வந்து படம் பண்ணணும், அந்த வயசிலும் ரஜினியை போல ஸ்பீடா நடக்கணும், நடிக்கணும்.. உங்க படத்தை பார்க்க அப்பவும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமா இப்படி காத்துக் கிடக்கணும், அப்போ நீங்க ஆசைப்படலாம் என்று சொல்லிய கலாநிதி மாறன், தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியாவிலேயே ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் என மாஸாக தனது பேச்சை முடித்துக் கொண்டார். எந்திரன் படத்துக்கு பிறகு ஜெயிலர் படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை கலாநிதி மாறன் வைத்துள்ளார் என்பது அவரது போல்டான பேச்சிலேயே தெரிகிறது என ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.