ஆண்கள் துணையின்றி 4,000 இஸ்லாமிய மகளிர் ஹஜ் பயணம்…பிரதமர் மோடி பெருமிதம்

முதல் முறையாக ஆண்களின் துணையின்றி 4 ஆயிரம் இஸ்லாமிய மகளிர் ஹஜ் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மனதில் குரல் நிகழ்ச்சியின் 103வது பதிப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில், தண்ணீரை சேமிக்க கிராம ஊராட்சி அளவில் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், மழைநீரை சேமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்த பிரதமர், அந்த இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவம் சிறப்பாக செயலாற்றியதாகவும், கூட்டு முயற்சியால் மீண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

நாடு முழுவதும் 10 லட்சம் கிலோ எடையுள்ள, 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோலில் இருக்கும் பிசார்புர் கிராமத்தைப் பற்றி பேசிய அவர், 20-25 ஆண்டுகள் முன்பாகத் பிசார்புர் கிராமம் கள்ளச்சாராயத்துக்குப் பேர் போனதாக இருந்தது, மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தது. முன்னாள் தேசிய ஆட்டக்காரரும், ஒரு பயிற்றுநருமான ரயீஸ் அஹ்மத் அக்கிராம இளைஞர்களின் கால்பந்து திறமைகளை அடையாளமறிந்தவர்.

சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே, கால்பந்தாட்டம் பிரபலமாகி விட்டது. தற்போது, பிசார்புர் கிராமத்தின் அடையாளம் என்றால் அது கால்பந்தாட்டம் என்றாகி விட்டது. இக்கிராமத்தில் இருந்து தேசிய மற்றும் மாநில அளவில் 40க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வந்திருக்கிறார்கள். 1200க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட கிளப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. கால் பந்தாட்டப் புரட்சி என்றே கூறலாம்” என்று தெரிவித்தார்.

மேலும், 250 முதல் 2ஆயிரத்து 500 ஆண்டுகள் வரை பழமையான, கடத்தப்பட்ட சிலைகளை இந்தியாவிடம் அமெரிக்கா திருப்பி ஒப்படைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். எனினும், மணிப்பூர் விவகாரம் குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை.

Leave A Reply

Your email address will not be published.