சீனக்குடா விமான விபத்தில் இரு அதிகாரிகள் பலி! – விசேட விசாரணைக் குழு நியமனம்.
திருகோணமலை – சீனக்குடா விமானப் பயிற்சித் தளத்தில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த விமானப் பயிற்சியாளர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை விமானப் படையின் சீனக்குடா விமானப் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் பி.ரி. 6 ரக விமானம் இன்று (07) முற்பகல் 11:27 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச விசேட விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.