ஹெரோயினுடன் தேரர் சிக்கினார்!
ஹெரோயின் போதைப்பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் வாரியபொல பகுதியில் நேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வீடு ஒன்றைப் பரிசோதனை செய்தபோது தேரர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேரர் சில சமயங்களில் ஒரு துறவியாகவும்,மற்ற நேரங்களில் ஒரு சாதாரண நபராகவும் செயற்பட்டார் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.