இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலவைக்கூட்டம்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலவைக்கூட்டம் நேற்று (13.09.3020) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தாய்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கொறோனா தாக்கம் காரணமாக அதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் மாணவர் இழந்த கல்வியை பெற்றுக்கொள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும், அதன் உறுப்பினர்களும் ஊக்கத்துடன் தொழிற்படுவதெனவும், இவ்வருடம் பொதுப்பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு மாறாக இடமாற்றங்களை மேற்கொள்ளக் கூடாதெனவும்,
பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் நன்மை கருதி
பின்வரும் தீர்மானங்கள் இன்றைய செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2020, 2021 ம் ஆண்டுகளில் பொதுப்பரீட்சைகள் ஆகிய
தரம் 5,
க .பொ .த சாதாரணம்
க பொ த – உயர்தரம்
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வி கொரோனோ வைரஸ் இடரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாணவர்களின் கல்வி நலன் கருதி பின்வரும் தீர்மானங்களை முன் வைக்கின்றோம்.
அதிபர்களோ அல்லது ஆசிரியர்களோ டிசெம்பர் 2021 க்கு முன்னர் 60 வயதை அடைந்து ஓய்வு பெறவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு டிசெம்பர் 2021 வரை மீள்நியமனம் (re employment) வழங்க வேண்டும்.
Smart classrooms & online classes.
இவை காலத்தின் கட்டாய தேவையாக மாறுகின்றன.
எனவே அதிபர், ஆசிரியர்களுக்கு இத்துறையில் விசேட பயிற்சி வழங்க வேண்டும்.
Smart phone, Laptop ஆகியவை அரசு இனாமாக வழங்க வேண்டும்.
அல்லது
ஆசிரியர்கள் தாமாக அதனை வாங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.
எனும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதோடு,
இவ்வருட இறுதிக்குள் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவிற்காக ஆட்சிமன்றக் கூட்டம், பிரதிநிதிகள் சபைக்கூட்டம் என்பன நடைபெறும். எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தவிர மத்திய, வடமத்திய, மேல்மாகாணங்களில் தமிழ்பாடசாலைகளினதும் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு உடனடியாகவே அவை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சில கல்வி வலயங்களின் பணிப்பாளர்களின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு அவர்களுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.