4வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஷிம்ரன் ஹெட்மயர் 39 பந்தில் 61 ரன்களை குவித்தார். ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 45 ரன்களை குவித்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். சஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடியாக ஆடினர். இதனால் ரன்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக தெறிக்க விட்டனர். இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர்.

முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 47 பந்தில் 5 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

ஜெய்ஸ்வால் 51 பந்தில் 3 சிக்சர், 11 பவுண்டரி உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் டி20 தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.