வவுனியா இந்துக்கல்லூரியில் முதியோர் விழிப்புணர்வு செயல்திட்டம்.
வவுனியா இந்துக்கல்லூரியில் முதியோர் விழிப்புணர்வு செயல்திட்டம்
வவுனியா மாவட்டப் பாடசாலை மாணவரிடையே மூத்தோர் விழுமியப் பண்புகளை வளர்க்கும் நோக்கில் மாணவரிடையே காலைப் பிரார்த்தனை வேளைகளில் விழிப்புணர்வு செயல்திட்டத்தை வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலகம் மாவட்ட செயலகம் பிரதேச செயகம் என்பவற்றுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த வகையில் இன்று 14.09.2020 காலை வவுனியா (கோவில்குளம்) இந்துக்கல்லூரியில் மாணவரிடையே கல்லூரி அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் “மூத்தோர் விழுமியம் ” என்ற தலைப்பில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் உரை நிகழ்த்தினார். “அரியவற்றுள் எல்லாம் அரிதே முதியோரைப் பேணித்தமராகக் கொளல்” என்ற வாக்கிற்கிணங்க மூத்தோர் சொல்வதையும் கவனித்து ஆராய்ந்து நடக்க வேண்டும்.
தாய் தந்தையை மதிக்கும் பிள்ளை சமூகத்தில் உள்ளபெரியோரையும் மதிக்கக் கற்றுக்கொண்டால் வாழ்வே வளமாகும். மாணவர்கள் சுயஒழுக்கம் சுயகட்டுப்பாடு சுயமுன்னேற்றம் பற்றி சிந்தித்தால் வாழ்வில் ஏற்றங்கள் தேடிவரும் எனத் தெரிவித்தார்