ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் நிலவின் மீது மோதி நொறுங்கியது.
ரஷ்யாவின் லூனா – 25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்க இருந்தது. ஆனால், அது நடப்பதற்கு முன்பாக சுற்றுப்பாதையில் நகர்ந்துகொண்டிருந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டதாக நேற்று (19) தெரிவித்திருந்த ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கொஸ்மோஸ் (Roscosmos), தற்போது விண்கலம் நிலவில் மோதியதாக கூறியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் ரஷ்யா மேற்கொண்ட முதல் நிலவுப் பயணம் இதுவாகும்.
உறைந்த நீர் மற்றும் விலைமதிப்பற்ற பல கூறுகள் நிலவில் உள்ளதாக கருதும் விஞ்ஞானிகள், அதன் ஒரு பகுதியை ஆராய இந்தத் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த விண்கலத்தை ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று நிலவில் தரையிறங்க வைப்பதாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.