சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது
சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் சரியாக இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. நொடிக்கு நொடி, நேர வித்தியாசமின்றி பகிரப்பட்ட டேட்டா மூலம் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கியதும் பல மீட்டர்கள் தூரத்திற்கு தூசி மண்டலம் நிலவில் பறந்தது. நிலவின் மேல்பகுதி மிகவும் மென்மையானது. அதேபோல் அதீத புழுதி மணல் கொண்டது. வெண்சாம்பல் போன்ற மணல் கொண்ட பகுதி இது.
அதனால் இங்கே தரையிறங்கியதும் பெரிய அளவில் புழுதி படலம் ஏற்பட்டது. இந்த புழுதி படலம் அடங்கும் வரை விக்ரம் லேண்டர் எதுவும் செய்யாது. வெறுமனே சிக்னலை மட்டுமே மேலே பறக்கும் ஆர்பிட்டருக்கு வழங்கும். நிலவின் வடக்கு பகுதியை விட தென் பகுதி புழு கொஞ்சும் கெட்டியானது. இந்த இடம் குளிராக, உறைந்து இருப்பதால் இங்கே பெரிதாக புழுதி இருக்காது. இருந்தாலும் விக்ரம் லேண்டர் போன்ற கனமான பொருள் இறங்கும் போது அங்கே மேற்பரப்பில் புழுதி கிளம்பவே செய்யும்.
சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது நிலவில் ஒரு நாள்.. அதாவது பூமியின் கணக்கில் 28 நாட்கள் இவை இரண்டும் செயல்படும். அதன்பின் அங்கே சூரிய ஒளி படாது என்பதால் இரண்டும் செயல் இழக்கும்.சந்திர மேற்பரப்பில் மூவர்ணக் கொடி மற்றும் இஸ்ரோ லோகோவின் முத்திரைகளை பதித்து , இந்தியாவின் அடையாளத்தை உருவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.