செந்தில் பாலாஜிக்கு ஆக.28 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற ஆகஸ்ட் 28 வரை நீதிமன்றக் காவல் நீடித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாா்.
அமைச்சா் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகு, அவரை 5 நாள்கள் காவலில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா். அதன் பிறகு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆஜா்படுத்தபட்ட அவரை, ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் வருகிற ஆகஸ்ட் 28 வரை நீதிமன்றக் காவல் நீடித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். மீண்டும் ஆகஸ்ட் 28-ல் நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.