கச்சத்தீவு மீட்பது தொடர்பான இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!
கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டமை ராஜதந்திர நடவடிக்கை என்பதால் அதில் தலையிட முடியாது என இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னை மீனவர் சங்கம் தாக்கல் செய்த வழக்கு, விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1974ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையினால் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது என உரிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய இந்திய-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, கச்சத்தீவு இலங்கையிடம் இருந்து பறிக்கப்பட்டு தமிழக மீனவர்களின் உரிமை மீண்டும் உறுதி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
முன்னதாக ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க, ஆட்சியில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் இதுவரை 48 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அங்கு 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 83 ஆகும்.
இதுவரை மீனவர்கள் கைது தொடர்கிறது என்றார் அவர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை அரசாங்கம் ஒப்படைக்க மறுத்துள்ளதாகவும், அதற்கு பாரதீய ஜனதா கட்சியே பொறுப்பு எனவும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் மீனவர்கள் தாக்கப்படும்போதும் அதுபற்றி மத்திய அரசிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மு.க.ஸ்டாலின்.
அவர்கள் இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினாலும் கைதுகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என முதல்வர் வலியுறுத்துகிறார்.
1974-ம் ஆண்டு கச்சத்தீவு இடமாற்றத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் கலைஞர் கருத்துத் தாக்கல் செய்தார்.
குறித்த தீவை இலங்கைக்கு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறியதாக வரலாறு தெரியாத சிலர் குற்றம் சாட்டுவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் உள்ளன என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடைபெற்ற போது, இவ்விடயமும் பேசப்பட்டது .
இந்தியாவை பிரிக்கும் பணியை காங்கிரஸ்தான் செய்தது என மோடி தரப்பினர் சுட்டிக் காட்டினர்.
1974-ம் ஆண்டு, இந்திய-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள இராமேஸ்வரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு இந்திய-இலங்கை மீனவர்களாலும் சமமாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதில், காங்கிரஸ் தனது அரசியல் தேவைகளுக்காக இந்திய மக்களை மூன்றாகப் பிரித்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.