’20’ இற்கு ஐ.நாவும் எதிர்ப்பு!

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 45ஆவது அமர்வில் இன்று ஆரம்ப உரையை ஆற்றும்போது அவர் இலங்கை அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.