ஈஸ்டர் தாக்குதலின் பின் அரசினால் கையகப்படுத்தப்பட்ட ஷரியா பல்கலைக்கழகம் மீண்டும் ஹிஸ்புல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது!
மட்டக்களப்பு புனானி பிரதேசத்தில் சுமார் நான்கு வருடங்களாக அரச மற்றும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஷரியா பல்கலைக்கழகம் இன்று (20) மீண்டும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.
சகரான் குழுவின் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின் , 2019 இல் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்த ஷரியா பல்கலைக்கழகம், சில காலங்கள் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாகவும், மருத்துவ சிகிச்சை மையமாகவும் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு புனானி ஷரியா பல்கலைக்கழகம் , 800 கோடிக்கும் அதிகமான பொருட் செலவில், அரேபியாவில் உள்ள தொழிலதிபர் ஒருவரால் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்ட நன்கொடை எனக் கூறப்பட்டது.