கனடாவில் சுக்தூல் சிங் படுகொலைக்கு உரிமை கூறியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய்
காலிஸ்தான் தீவிரவாதிகள் விவகாரத்தில் இந்தியா- கனடாவுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. கனடாவில் பஞ்சாப்பைச் சேர்ந்த அதிகமானோர் வசித்துவருகின்றனர். கடந்த ஜூன் மாதம் கனடாவில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய உளவுத்துறைக்குத் தொடர்பிருப்பதாக கனடா நேரடியாக குற்றம்சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.
கனடாவில் சுக்தூல் சிங் படுகொலை செய்யப்பட்டதில் தனக்குத் தொடர்பிருப்பதாக டெல்லி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பிஷ்னோய் வெளியிட்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவில், ” சுக்தூல் சிங் எங்களது கூட்டத்தைச் சேர்ந்த குர்லால் பிரார் கொலையில் முக்கியப் பங்கு வகித்தவர். போதைப்பொருளுக்கு அடிமையான சுக்தூல் சிங் அவர் செய்த பாவங்களுக்கு தண்டனை பெற்றிருக்கிறார். எதிரிகள் இந்தியா உட்பட எங்கு இருந்தாலும் தப்பிக்க முடியாது” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியாவில் இருந்து தப்பித்து கனடாவில் குடிபெயர்ந்து இந்தியாவால் தேடப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்துக்குதற்கு இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து, இந்தியாவுக்கான தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற கனடா உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி தரும் விதமாக தில்லியில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை 5 நாள்களுக்குள் வெளியேற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆணையிட்டது.
இதற்கிடையே, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்த சம்பவங்கள் இரு நாட்டு அரசுக்கு இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு போலி கடவுச்சீட்டு மூலம் பஞ்சாப்பிலிருந்து கனடாவிற்கு தப்பி சென்று தலைமறைவாக இருந்த சுக்தூல் சிங்கை இந்தியாவின் என்.ஐ.ஏ அமைப்பு தேடி வந்த நிலையில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுக்தூல் சிங் கனடா, மேற்கத்திய நாடுகளில் வசித்து வந்தான். சுக்தூல் சிங் போலி ஆவணங்கள் மூலம் 2017-ம் ஆண்டு பஞ்சாபிலிருந்து கனடாவுக்குத் தப்பிச் சென்றார். அடுத்தடுத்து இரண்டு காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக கனடாவில் பதுங்கியிருக்கும் கோல்டி பிரருக்கு இந்தியா குறி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை உட்பட ஏராளமான குற்றங்களில் ஈடுபட்டிருக்கும் கோல்டி பிரர் தற்போது கனடாவில் பதுங்கியிருக்கிறார். முதல் கட்டமாக பஞ்சாப் போலீஸார் இன்று காலையிலிருந்து மாநிலம் முழுவதும் கோல்டி பிரர் ஆதரவாளர்களுக்கு எதிராக ரெய்டு நடத்திவருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி, கனடாவின் வின்னிபெக்கில், சுக்தூல் சிங் கில் என்ற சுகா துனேகே கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
துனேகே, புதன்கிழமை அடையாளம் தெரியாத ஆசாமிகளால், சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிஷ்னோய் கும்பலின் கூட்டாளிகள், குர்லால் ப்ரார் மற்றும் விக்கி மிட்கேரா ஆகியோரின் கொலை விவகாரத்தின் பின்னணியில், துனேகே இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில்தான் அவனை கொலை செய்ததாகவும் ஒரு ஃபேஸ் புக் பதிவு கூறுகிறது.
பிஷ்னோயின் கும்பல் என கூறிக்கொள்ளும் அந்த ஃபேஸ்புக் பக்கம், சுக்தூல் சிங்கை ஒரு “போதை அடிமை” என்று அழைத்த பிஷ்னோயின் கும்பல் அவர் பலரின் வாழ்க்கையை அழித்ததாகவும், இறுதியில் அவர் “அவரது பாவங்களுக்காக” தண்டிக்கப்பட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சோதனை நடந்து வருகிறது.
2017-ம் ஆண்டு மாணவர் விசாவில் கனடா சென்ற கோல்டி பிரர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் முக்கியப் பிரமுகராக இருக்கிறார். கனடாவில் பதுங்கி இருந்துகொண்டு பஞ்சாபில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் கனடாவில் பதுங்கியிருக்கும் இந்திய தீவிரவாதிகள் பற்றிய விவரங்களை மத்திய அரசு கனடாவிடம் கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கோல்டி பிரருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் விடுத்திருக்கிறது.
ஏற்கெனவே கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.