பனைசார் உற்பத்திப பொருட்களின் விற்பனை நிலையம் திறந்து வைப்பு.

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகமம் பிரதேச செயலகப்பிரிவின் பத்தினிபுரம் கிராமத்தில் பனைசார் உற்பத்திப பொருட்களின் விற்பனை நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தவினால்(15) திறந்து வைக்கப்பட்டது.

பனைசார் உற்பத்திப்பொருட்களில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர என். பிரதீபன், தம்பலகமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி,உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.