பில்கேட்ஸை ஆச்சரியப்பட வைத்த இந்திய பெண் போஸ்ட் மாஸ்டர்
இந்தியா வந்த பில்கேட்ஸ், பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் குஸ்மா என்பவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் சமீப காலமாக நடைபெற்று வரும் டிஜிட்டல் முன்னேற்றங்கள் காரணமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை மைக்ரோசாஃப்ட் ஃபவுண்டர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார். அவர் linkedin-இல் பதிவு செய்த போஸ்ட் ஒன்றில், பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் குஸ்மா என்பவர் ஸ்மார்ட்போன் சாதனம் மற்றும் பயோமெட்ரிக் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவது குறித்த ஒரு ஸ்டோரியை அதில் பதிவு செய்திருந்தார்.
“இந்தியா செல்லக்கூடிய எனது பயணத்தில் நம்ப முடியாத ஒரு மாற்றத்தை நான் கவனித்தேன்: குஸ்மா என்ற இளம் பெண் லோக்கல் போஸ்டல் டிபார்ட்மெண்டில் ஆச்சரியமூட்டும் விதமாக வேலை பார்த்ததை கண்டு நான் வியந்துபோனேன்,” என்று பில்கேட்ஸ் அந்த போஸ்ட்டில் பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் முன்னேறி வரும் தொழில்நுட்பம் காரணமாக டிஜிட்டல் பப்ளிக் இன்ஃப்ராஸ்ட்க்சரில் மேம்பாடுகள் நடத்தப்பட்டு, இது நிதி சார்ந்த வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இதன் விளைவாக குஸ்மா போன்ற பிரான்ச் போஸ்ட் மாஸ்டர் ஸ்மார்ட் போன் டெக்னாலஜி மற்றும் பயோமெட்ரிக் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெறுகிறார்கள். இந்த கருவிகளை பயன்படுத்தி குஸ்மா சிக்கலான வங்கி சேவைகளை கூட எளிதான முறையில் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். இது பண பரிமாற்றத்தை தாண்டி, தனது பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு குஸ்மா ஒரு வகையான நம்பிக்கை மற்றும் நிதி சார்ந்த சுயாதிகாரத்தை அளிக்கிறார்.
பிரான்ச் போஸ்ட் மாஸ்டராக குஸ்மாவின் பங்கு நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. தபால் துறையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக்களின் பயன்பாடு நிதி வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு குறித்த ஒரு நேர்மறையான முயற்சியை காட்டுகிறது. குஸ்மாவின் இந்த பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பில்கேட்ஸ் அவரது பதிவு மூலமாக உலகிற்கு தெரிவித்து இருக்கிறார். பில்கேட்ஸிடமிருந்து இத்தனை பெரிய பாராட்டுக்களை பெறுவது நிச்சயமாக பெருமைக்குரிய விஷயமாக அமைகிறது. இவரது இந்த பதிவு இந்தியா முன்னேற்ற பாதை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவில் தொழில்நுட்ப முன்னேற்றம் முதல் பொருளாதார முன்னேற்றம் வரை ஏராளமான வளர்ச்சி சார்ந்த மைல்கல்கள் அடையப்பட்டு அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைகிறது. வளர்ச்சி அடைந்து வரும் நாடாக இருக்கக்கூடிய இந்தியா கூடிய விரைவில் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசையாக இருக்கும் பொழுது, பில்கேட்ஸ் போன்ற சிறப்பு வாய்ந்த நபர்களின் பாராட்டுக்கள் நமக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் அமைகிறது என்பதில் சந்தேகம் இல்லை.