வைத்தியசாலை கருத்திட்டம் ஆளுநரிடம் கையளிப்பு.

சாய்ந்தமருது வைத்தியசாலை கருத்திட்டம் ஆளுநரிடம் கையளிப்பு

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யாஹம்பத் (15) விஜயமொன்றினை மேற்கொண்டு வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளை பார்வையிட்டதோடு அதன் குறை நிறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதியளித்தார்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.மிஹ்லார் தலைமையில் நடைபெற்றபோது மேற்படி வாக்குறுதியை வழங்கி வைத்தார்.

இதன்போது, வைத்தியசாலைக்கு தற்போது அவசரமாவும் அவசியமாகவும் தேவையாகவுள்ள அவசர சிகிச்சை பிரிவு, பற்சிகிச்சைப் பிரிவு, ஆய்வு கூடம் போன்றவற்றுக்கான கட்டடத் தொகுதியின் அவசியத்தைப் பற்றி வைத்திய அபிவிருத்தி குழுவினால் எடுத்துக் கூறப்பட்டதுடன் அதற்கான கருத்திட்டமொன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன், பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.கே. ரஜாப்டீன், வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர் உட்பட பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஆளுநரின் வருகையை முன்னிட்டு அபிவிருத்தி சபையினால் நினைவுச் சின்னமும் ஆளுநருக்கு வழங்கிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.