சர்வமத தலைவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வுக் கலந்துரையாடல்.
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி (RDF) நிறுவனத்தின் வழிகாட்டலில் இனங்களுக்கிடையில் ஏற்படும் வேற்றுமைகளையும் முரண்பாடுகளையும் நீக்கும் நோக்கில் அரசியல் தலைவர்களுக்கும் சர்வமத தலைவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வுக் கலந்துரையாடல் ஒன்று இன்று 16 வவுனியா ஓவியா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது..
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான குணசிங்கம் திலிபன் மற்றும் வினோநாகரலிங்கம், அடைக்கலநாதன் செல்வம் மற்றும் சர்வமதத் தலைவர்கள் கிராம அபிவிருத்தி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.