நீடா அம்பானிக்கு “மும்பை குடிமகன்” விருது..!
முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானிக்கு 2023-24 ஆம் ஆண்டுக்கான “மும்பை குடிமகன்” விருதை வழங்கி கவுரவித்துள்ளது பாம்பே ரோட்டரி கிளப் . சுகாதாரம், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு அவர் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் தொண்டு நிறுவனத்தில் மேலாளராக உள்ள நீடா அம்பானி, ஃபுட் பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மண்ட் லிமிட்டடின் நிறுவனராகவும் உள்ளார். மேலும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணியும், நியூயார்க்கின் மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் வாரியத்தின் கௌரவ அறங்காவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணியும் ஆவார்.
இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதமாக மும்பையில் கலாச்சார மையத்தையும் தொடங்கியுள்ளார் நீட்டா. அதுமட்டுமன்றி மும்பையில் உள்ள சர் எச் என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறார்.