மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள்: குஜராத்தில் அதிகரிக்கும் வறுமை
குஜராத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஏழைகள் அல்லது 31 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்த வறுமைக்கோடானது இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, கிராமப்பகுதிகளில் மாதத்துக்கு ரூ.816ம், நகரப் பகுதிகளில் மாதத்துக்கு ரூ.1000மும், நாள் ஒன்றுக்கு கிராமத்தில் ரூ.26ம், நகரப் பகுதிகளில் ரூ.32ம் செலவிடும் திறனைக் கொண்டு அளவிடப்படுகிறது.
செப்டம்பர் 14ஆம் தேதி குஜராத் பேரவையில், காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்விக்கு பதிலளித்த ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பச்சுபாய் மகன்பாய் கபத், குஜராத்தில் 31,61,310 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களாகக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறினார். இவர்களில் 16,28,744 குடும்பங்கள் மிக வறுமையில் இருப்பதாகவும், 15,32,566 குடும்பங்கள் ஏழ்மையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 – 21ம் ஆண்டில், 1,047 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கீழ் தள்ளப்பட்டுள்ளனர். வெறும் 14 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் வந்துள்ளனர். இதே நிலை 2021-22ல் எடுத்துக்கொண்டால் 1,751 பேர் வறுமைக்கோட்டுக்கீழ் தள்ளப்பட்டுள்ளனர். 2 குடும்பம்தான் மேலே வந்துள்ளது. இது 2022-23ல் 303 ஆக இருக்கிறது. ஒரே ஒரு குடும்பத்தான் மேலே வந்துள்ளது.
சராசரியாக ஒரு குடும்பத்தில் 6 பேர் இருக்கிறார்கள் என்று கொண்டால், குஜராத்தில் உள்ள 31 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கீழ் வாழ்கிறார்கள் என்றால், கிட்டத்தட்ட 7 கோடியே 89 லட்சம் பேர் ஏழைகளாக இருக்கிறார்கள் என்பது அர்த்தமாகிறது.