ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர்
நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இருமாத நாணயக் கொள்கையை வெள்ளிக்கிழமை அறிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ விகிதத்தை 6 சதவிகிதமாக மாற்றாமல் வைத்திருக்க பணவியல் கொள்கைக் குழு (எம்பிசி) ஒருமனதாக முடிவு செய்ததாக தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததாவது:
ரெப்போ விகிதத்தை 6 ஆக மாற்றாமல் வைத்திருக்க பணவியல் கொள்கைக் குழு (எம்பிசி) ஒருமனதாக முடிவு செய்ததை அடுத்து நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் 4 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவிகிதமாக நீடிக்கிறது. பண்டிகை காலங்கள் தொடங்கி உள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவிகிதமாக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. பணவீக்கத்தை 4 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 2023-24 க்கு 5.4 சதவிகிதமாகவும், இரண்டாவது காலாண்டில் 6.4 சதவிகிதமாகவும், மூன்றாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாகவும், நான்காவது காலாண்டில் 5.2 சதவிகிதமாகவும் இருக்கும்.
“எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு 2023-24 நிதியாண்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டின் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.”எனவே, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாததால் வங்கிகள் வழங்கும் வீடும், வாகனம், தனிநபர் கடன்களில் மாற்றம் இருக்காது.
வளர்ந்து வரும் பணவீக்க இயக்கவியல் குறித்து நாங்கள் விழிப்புடன் செயல்படுகிறோம். பணவீக்க இலக்கு 4 சதவிகிதமே தவிர 2 முதல் 6 சதவிகிதம் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், பணவீக்கத்தை இலக்குக்குள் நிலையான அடிப்படையில் சீரமைப்பதே நோக்கம் என்று என சக்திகாந்த தாஸ் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், காய்கறி விலை உயர்வு, குறிப்பாக தக்காளி, மற்றும் சமயைல் எரிவாயு உருளை விலை குறைப்பு ஆகியவற்றின் பின்னணியில் ஏறக்குறைய பணவீக்கம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடப்பு நிதியாண்டின் 2023-24 முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த ஆண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவிகிதமாக குறைந்துள்ளது என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.