சிதைவடைந்த நிலையில் கடற்கரையிலிருந்து மனிதத் தலை மீட்பு!
துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் இன்று காலை இந்த மனிதத் தலை மீட்கப்பட்டுள்ளது என்று பமுனுகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துள்ளது என்றும் பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மனிதத் தலை தொடர்பில் நீதிவான் விசாரணை நடத்தப்படவுள்ளது என்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பமுனுகம பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.