வெடுக்குநாறிமலை ஆலய வருடாந்த பொங்கல்.

வெடுக்குநாறிமலை ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் முதலாம் நாள் வழிபாடுகள் 17.09.2020 அன்று சிறப்புற தொடங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னரும் நெடுங்கேணிப்பொலிசார் கடும் அழுத்தத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கொடுத்ததுடன் சீருடை தரிக்காத பொலிசார் ஐந்துபேர் முழுநேர கண்காணிப்பிலும் ஈடுபட்டார்கள். இராணுவப்புலனாய்வாளர்கள் இடையிடையே ஆலயத்திற்கு வருகைதருவதும் செல்வதுமாக காணப்பட்டார்கள்.

ஆலய உற்சவத்திற்கு ஒலிபெருக்கி சாதனம் பயன்படுத்த நெடுங்கேணிப்பொலிசார் தடைவிதித்துள்ளார்கள்.பொலிசாரின் கடும் கண்காணிப்புடன் கூடிய பிரசன்னத்தால் பக்தர்களின் வரவு இன்று சடுதியாக குறைந்து காணப்பட்டது. குறிப்பிட்டளவு கிராம மக்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இளைஞர் குழுவும் வவுனியாவிலிருந்து ஒரு இளைஞர்குழுவும் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

உற்சவத்தின் ஆரம்பநாளின் பாரம்பரிய நிகழ்வுகளான சூலம் எடுத்தல் விளக்குவைத்தல் உச்சிமலை ஆதிலிங்கேஸ்வரர் தரிசனம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

நாளை உற்சவத்தின் இரண்டாம் நாளாகும் இயலுமான அடியார்கள் குறித்த உற்சவத்தில் கலந்துகொள்ளுமாறு ஆலய அறங்காவலர்சபையினர் வேண்டுகின்றார்கள்.

26.09.2020(சனிக்கிழமை) உற்சவத்தின் இறுதிநாளில் 108 பானைகளில் பொங்கிப்படைக்கும் வழிபாட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.