இணையத்திலும் இம்சைப்படுத்தல்களை ஆரம்பித்துள்ளனர் – சற்குனராஜா
இணையவழியில் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க இம்சையாளர்களும் இணையத்தில் தமது இம்சைகளை ஆரம்பித்துள்ளனர் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சற்குனராஜா தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பெரும்பான்மையின மாணவர்களால் இடம்பெற்றாக கூறப்படும் இணையவழி பாலியல் ரீதியான பகிடிவதை தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
புதுமுக மாணவர்கள் வரும் போது இம்சைப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. இவை பல்வேறு பரிமாணங்களில் நடைபெறுகின்றன.
கோவிட்- 19 இடர் நிலைமைகளினால் கற்றல்கள் இணையவழியில் இடம்பெற ஆரம்பித்திருந்தோம். இம்சையாளர்களும் இணையத்தில் தமது இம்சைகளை மேற்கொள்கின்றன.
ஊடகங்களும், பொது மக்கமும் ஒன்றினைந்து பகிடிவதையை வேறறுக்க முடியும்.
இரண்டு நாட்களுக்குள் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு குற்றப் பத்திரத்தை தயாரித்து ஏழு நாட்களுக்குள் இம்சைச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் பதில் வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அவர்களின் குற்றங்களுக்கு ஏற்றபடி அவர்களுக்கான தகுந்த தண்டனைகள் வழங்கப்படும்
மாணவர்கள் ஓழுக்காற்று சபை ஒன்றினையும் உருவாக்கியுள்ளதாகவும் இம்சைப்படுத்தல் தொடர்பில் இனிவரும் காலங்களில் உரிய கவணம் செழுத்தப்படும் எனவும், தெரிவித்தார்.