ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி கோர விபத்து.

கனடாவில் ஐந்து வாகனங்கள் ஒன்று மீது ஒன்று மோதி கொண்ட விபத்தில் வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்றாறியோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள சாலையில் கனரக வாகனம் வேகமாக வந்த நிலையில் டிராபிக்கில் திடீரென அதை ஓட்டுனரால் நிறுத்த முடியவில்லை.
இதையடுத்து முன்னால் இருந்த 4 வாகனங்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக மோதியது.
இதில் அந்த வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கியது.
இந்த வாகனங்களில் மொத்தமாக 9 பேர் இருந்த நிலையில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 87 வயது பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது தீயணைப்பு வீரர்கள் காரில் இருந்து உள்ளிருந்தவர்களை வேகமாக வெளியில் இழுத்ததால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது